2022 மார்ச் மாதம் நிறைவு பெற்ற கணக்காண்டில் ஸ்ரீலங்கன் நிறுவனம் 525 மில்லியன் அமெரிக்க (165.3 பில்லியன் ரூபா) டொலர் இழப்பை சந்தித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றின் பின்னணியில் இப்பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் 2021ம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவைத் தரத்திலும் ஸ்ரீலங்கன் பாரிய சரிவை சந்தித்துள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்துக்கான பயணப் பாதை மாத்திரமே தொடர்ச்சியாக இலாபமீட்டி வருவதாக நிறுவன முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment