ஜனாதிபதியின் அச்சுறுத்தல்: CTU விசனம் - sonakar.com

Post Top Ad

Thursday 20 April 2023

ஜனாதிபதியின் அச்சுறுத்தல்: CTU விசனம்

 பரீட்சைகளை கட்டாய சேவையாக்கி, விடைத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமுமில்லையென தெரிவிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்.


விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானதற்கு நாட்டின் பொருளாதார சூழ்நிலையே காரணம் என தெரிவிக்கும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின், விடை திருத்தும் பணியிலிருந்து விலகிக் கொள்ளும் ஆசிரியர்களுக்கு எதிரான ஜனாதிபதியின் பேச்சு அதிருப்தியளிப்பதாக விளக்கமளித்துள்ளார்.


இவ்வாறு தமது கடமையைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment