ஏப்ரல் 25ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்பில்லையென தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்பர.
பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் கடிதம் அனுப்பியிருந்த போதிலும் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, நாளை 11ம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கிறது.
தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதியை வழங்கும் சூழ்நிலையில் அரசு இல்லையென்பதன் பின்னணியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் பின் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment