அநுர குமார கைதாகலாம்: நாகனந்த எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 15 April 2023

அநுர குமார கைதாகலாம்: நாகனந்த எச்சரிக்கை




ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவை கைது செய்யக் கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார் சட்டத்தரணி நாகனந்த கொடிதுவக்கு.


அநுர உட்பட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2017 காலப் பகுதியில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் பின்னணியிருப்பதாகவும், அநுர உட்பட்டோர் ஏதோ ஒரு கட்டத்தில் முடக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


அரகலயவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த ரணில், அதனை அடியோடு இல்லாமலாக்கியது போன்று ஜே.வி.பி விரைவில் பாடம் கற்றுக் கொள்ளும் எனவும் அவர் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment