ஆட்சியாளர்கள் பகிரங்கமாக திருடும் நாடு: ஒமல்பே தேரர் - sonakar.com

Post Top Ad

Saturday 22 April 2023

ஆட்சியாளர்கள் பகிரங்கமாக திருடும் நாடு: ஒமல்பே தேரர்

 ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்களாகியும், அதன் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து தண்டிக்க முடியாத பொறுப்பற்ற நாடாக இலங்கை விளங்குவதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஒமல்பே சோபித தேரர்.


இந்நிலையில், இலங்கையை பௌத்த நாடு என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்பட வேண்டும் எனவும் இது பௌத்த தர்மத்துக்கு முரணான, பொறுப்பற்ற தலைமைத்துவத்தின் வெளிப்பாடு எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


அது போலவே பொது மக்கள் பணத்தை பகிரங்கமாகவே அதிகாரிகள் திருடும் ஒரே நாடு இலங்கையெனவும் தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment