பிக்குவை அறையில் பூட்டி 'தாக்கிய' பெண்கள் - sonakar.com

Post Top Ad

Friday 28 April 2023

பிக்குவை அறையில் பூட்டி 'தாக்கிய' பெண்கள்

 நிகவரட்டிய பகுதி விகாரையொன்றில் பணியாற்றி வந்த 22 வயது பௌத்த துறவியொருவரை அறையில் வைத்துப் பூட்டித் தாக்கியதாக ஏழு பெண்கள் மீது குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளதையடுத்து குறித்த பெண்களை தேடுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


தற்போது குறித்த பௌத்த துறவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, இச்சம்பவத்தில் நிகவரட்டிய பிரதேச சபை தவிசாளர்களின் ஆதரவாளர்களே தொடர்பு பட்டிருப்பதாகவும் குறித்த சம்பவத்தின் போது பௌத்த துறவி பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாகவும் விகாராதிபதி தெரிவிக்கிறார்.


தற்போது குறித்த பெண்களை அடையாளங்கண்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment