வசந்த: அமெரிக்காவின் முடிவை நிராகரிக்கும் இலங்கை - sonakar.com

Post Top Ad

Thursday 27 April 2023

வசந்த: அமெரிக்காவின் முடிவை நிராகரிக்கும் இலங்கை

 முன்னாள் கடற்படைத் தளபதியும் வட மேல் மாகாண ஆளுனருமான வசந்த கரன்னகொட மற்றும் அவரது குடும்பத்தார் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் தீர்ப்பினை நிராகரிப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளது இலங்கை.


மனித உரிமை மீறல்கள் பின்னணியில் வசந்த மற்றும் குடும்பத்தாரை கருப்புப் பட்டியலில் இணைத்துள்ள அமெரிக்க அரசாங்கம், இது முன்மாதிரியான முடிவென அறிவித்துள்ளது.


இறுதி யுத்த காலத்தில் பாதுகாப்பு படைகளில் முக்கிய பதவிகளை வகித்த பலர் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment