தேர்தல் இழுபறி: நீதிமன்றம் சென்றுள்ள NPP - sonakar.com

Post Top Ad

Tuesday 14 March 2023

தேர்தல் இழுபறி: நீதிமன்றம் சென்றுள்ள NPP

 நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவல்லதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அரசு தொடர்ந்தும் பின் போட முயல்வதாக தெரிவித்து வரும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி, நீதிமன்றை நாடியுள்ளது.


மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் 'தேதி' சட்டபூர்வமான அறிவிப்பில்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்தில் தேதி குறிக்கப்பட்டுள்ளது.


எனினும், இத்தேதியில் தேர்தலை நடாத்துவதற்கான நிதியை வழங்கும் நிலையில் 'அரசு' இல்லையென ஆட்சியாளர்கள் நீதிமன்றை நாடி தேர்தலைத் தவிர்ப்பதற்கான இடமிருப்பதாக நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையிலேயே, ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் முந்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment