சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 March 2023

சஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்த வழக்கு  கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில்  இன்று விசாரணைக்கு  வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அதற்கமைவாக 25000ஃ- ரூபாய் ரொக்கப் பிணையிலும்இ25 இலட்சம் இருவர் அடங்கிய  சரிரப் பிணையிலும் மேலும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளின் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சஹ்ரான் ஹாஸிமின் மனைவிக்கு பிணை வழங்கப்பட்டது.


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணைகள் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளதுடன் குற்ற ஒப்புதல் வாதப்பிரதிவாதங்கள் பிணை விண்ணப்பம் என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில்இ வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட போதே கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


சர்ஜுன் லாபீர்

No comments:

Post a Comment