இந்திய முட்டை 'கேக்' : எச்சரிக்கும் கன்டீன் சங்கம் - sonakar.com

Post Top Ad

Monday 27 March 2023

இந்திய முட்டை 'கேக்' : எச்சரிக்கும் கன்டீன் சங்கம்

 கொழும்பு துறைமுகத்தில் முடங்கியிருக்கும் இந்திய முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் புத்தாண்டு 'கேக்' வகைகளை மக்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறது அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம்.


விரைவில் அழுகிப் போகக் கூடிய குறித்த வகை முட்டைகள் ஏலவே ஏழு நாட்களுக்கு மேலாக துறைமுகத்தில் முடங்கிப் போயிருப்பதாகவும் அது ஆபத்தானது எனவும் குறித்த சங்கத் தலைவர் அசேல விளக்கமளித்துள்ளார்.


பேக்கரிகளும் இந்திய முட்டைகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment