நாடாளுமன்றை கலைத்து விடுங்கள்: ஒமல்பே தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 5 March 2023

நாடாளுமன்றை கலைத்து விடுங்கள்: ஒமல்பே தேரர்

 நாடாளுமன்றை கலைத்து விடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.


அதற்கடுத்து, பொதுத் தேர்தலை நடாத்தி மக்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்க வழி செய்யாவிட்டால் சர்வதேச நிதியுதவிகள் ஒரு போதும் எதிர்பார்ப்பது போன்று கிடைக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதை அரசு தள்ளிப் போட முயன்று வந்த நிலையில், தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment