ரணிலை 'லீ குவான் யு' வாக மாறச் சொல்லும் ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Saturday 11 February 2023

ரணிலை 'லீ குவான் யு' வாக மாறச் சொல்லும் ரஞ்சன்

 



இலங்கையை மீளக்கட்டியமைத்து, சிங்கப்பூரின் லீயாக கோட்டாபய உருவாகப் போகிறார் என்ற கோசம் முற்றாக சிதைந்து, ஓய்ந்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை லீயாக மாற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


சிங்கப்பூரின் லீ குவான் யுவை அந்நாட்டின் பிரபல பாதாள உலக கோஷ்டியினரே ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த போதிலும், பதவிக்கு வந்த பின் பாதாள உலகத்தையே லீ குவான் யு அழித்து விட்டதாகவும், ரணிலையும் இந்நாட்டின் 'திருடர்களே' தமது மெய்ப்பாதுகாவலர்கள் போன்று ஜனாதிபதியாக்கியுள்ள போதிலும், ரணில் அதனை மறந்து திருடர்களுக்கு பாடம் கற்பித்தால் வரலாற்றில் நிலைக்க முடியும் எனவும் ரஞ்சன் விளக்கமளித்துள்ளார்.


இலங்கையின் 'திருட்டு' கூட்டத்தினாலேயே தனக்கும் மன்னிப்பு கிடைத்ததெனவும் தெரிவிக்கின்ற ரஞ்சன், ஜனாதிபதி ரணில் திருடர்கள் விடயத்தில் புரட்சியாக எதையும் செய்வார் என தான் நம்பவில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment