நிதி பிரச்சினை: கட்சிகளுடன் பேச முயலும் தே.ஆ.கு - sonakar.com

Post Top Ad

Saturday 11 February 2023

நிதி பிரச்சினை: கட்சிகளுடன் பேச முயலும் தே.ஆ.கு

 தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும், தேர்தல் இடம்பெறுமா? இல்லையா என்பது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகிறது.


முக்கியமாக, தேர்தலை நடாத்துவதற்கான நிதிப் பற்றாக்குறை இதில் பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. 77 கோடி ரூபாய் தேவைப்படுகின்ற போதிலும் திறைசேரியினால் 10 கோடி ரூபாவே வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்ந்தும் பேசு பொருளாகியுள்ளது.


இப்பின்னணியில், கட்சி செயலாளர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment