உள்ளூராட்சி சபைகளை 'நடாத்துவதும்' கஷ்டம்: ருவன் - sonakar.com

Post Top Ad

Sunday 26 February 2023

உள்ளூராட்சி சபைகளை 'நடாத்துவதும்' கஷ்டம்: ருவன்

 12 பில்லியன் ரூபா செலவில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்தினாலும் அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகளை நடாத்துவதற்கான ஊழியர் கொடுப்பனவுகள் மாத்திரம் 135 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைகளை இயக்குவது கஷ்டம் எனவும் விளக்கமளித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன.


மார்ச் 9 தேர்தல் இடம்பெறப் போவதில்லையென்பது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது தேர்தல் நிதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சபாநாயகரிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.


இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கப்பெறுவதும் இழுபறியில் உள்ளதால் கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பிலும் அவசரப்படப் போவதில்லையென ஜனாதிபதி விளக்கமளித்துள்ளமையும், இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதை மேலும் பலவீனப்படுத்தும் என அவதானிகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment