2010 ஜனாதிபதி தேர்தலின் போது விமல் வீரவின்சவின் கட்சியைச் சேர்ந்த முசம்மிலை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க 'விலை' பேசிய வழக்கின் பின்னணியில் முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம், குறித்த நபரின் சிவில் உரிமைகளை ஏழு வருடங்களுக்கு இடை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
தாம் முஸ்தபாவினால் விலை பேசப்பட்டதாக முசம்மில் செய்தியாளர் சந்திப்பு நடாத்தி குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அதற்காக வழங்கிய சிசிடிவி காணொளிகள் சந்தேகத்துக்கிடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சில காலம் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்த முஸ்தபா, மீண்டும் நாடு திரும்பி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன் தனது புதல்வருக்கு களம் அமைத்துக் கொடுக்க பாடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment