உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆயத்தங்களை நிறுத்தும் உத்தரவு கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை 23ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெறவிருந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், திட்டமிட்டிருந்தபடி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறப் போவதில்லையென்ற நிலையில், தற்போது வழக்கு விசாரணை 23ம் திகதி இடம்பெறவுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும், அரசு பின் கதவால் அதனை தள்ளிப் போடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி எதிர்க்கட்சியினர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றமையும் தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரியும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment