பலவீனமான 'அமைச்சுக்களுக்கு' புதிய தலைகள் - sonakar.com

Post Top Ad

Wednesday 18 January 2023

பலவீனமான 'அமைச்சுக்களுக்கு' புதிய தலைகள்

 ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வரவு - செலவுத் திட்டத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் குறித்து மீண்டும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


பலவீனமாகக் காணப்படும் அமைச்சுக்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் இப்பின்னணியில் முக்கிய அமைச்சுக்களுக்கு , பழைய குழுவிலிருந்து 'புதிய' நியமனங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாற்றத்துக்குள்ளாகும் குழுவில் உள்ள முகங்கள் அவ்வப்போது 'செயற்பாடில்லாத' நபர்களாக மாறி மாறி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்பதும், தேர்தல் கால ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக அறியப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment