எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்கு உச்ச கட்ட போட்டி சூழ்நிலை உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், சமகி ஜன பல வேகய தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்தாவது மேயர் பதவியைப் பிடிக்கக் கூடிய முஸ்லிம் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஹிருனிகாவும் இப்போட்டியில் களமிறங்கியுள்ளதுடன் சஜித் பிரேமதாச பல முனைகளில் திட்டம் தீட்டி வருவதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மாநகர சபை உறுப்பினர்களுடனான 'வர்த்தகம்' இம்முறை பலமாக இருக்கும் என்பதால் வேட்பாளர்களாவதற்கும் கிராக்கி உருவாகியுள்ளமையும், மறுபுறுத்தில் நிதிப்பற்றாக்குறையை காரணங்காட்டி தேர்தலை தள்ளிப் போடுவதற்கான சூட்சுமங்களும் நடந்தேறி வருவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment