மொட்டு கட்சியினர் 'கூட்டம்' நடாத்த தயக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 30 January 2023

மொட்டு கட்சியினர் 'கூட்டம்' நடாத்த தயக்கம்

 



உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில் மொட்டுக் கட்சியினர் பொதுக் கூட்டங்களை நடாத்தத் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிராந்திய அமைப்பாளர்கள் தயங்கி வரும் அதேவேளை வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் முன் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதுடன் இது தொடர்பில் கட்சி மட்டத்தில் குழப்பங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.


மஹிந்தவின் தலைமையில் தொடர்ச்சியான கூட்டங்கள் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் முதலாவது கூட்டத்தின் இடம் கூட இன்னும் முடிவு செய்யப்படவில்லையென பெரமுன வேட்பாளர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment