ஜனாதிபதி தேர்தலை முற்படுத்த ஆராயும் ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday 1 January 2023

ஜனாதிபதி தேர்தலை முற்படுத்த ஆராயும் ரணில்

 


உள்ளூராட்சி தேர்தலை பிற்படுத்தி, அதற்கு முன்பாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கும் ரணில் தரப்பு ஆராய்வதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன அரசியல் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில் பெரமுன அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இது மாற்று வழியாகவும் பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இது குறித்தும் ஆளுங்கட்சிக்குள் பேச்சு நிலவுகின்ற அதேவேளை, பெரமுனவில் தமக்கான 'மதிப்பு' குறைவதாக கணிப்பிட்டுள்ள பிறிதொரு குழுவினர் பிரளயத்தில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment