2023 முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய 'பாரிய' வெற்றியொன்றை எதிர்பார்த்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, தமது கட்சியூடாக போட்டியிட வேட்பாளர் பட்டியல்கள் குவிந்து போயுள்ளதாகவும், சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்சி 'சிரத்தையுடன்' செயற்படுவதாகவும் அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கிறார்.
இதேவேளை, சமகி ஜன பல வேகயவின் எதிர்க்கட்சி கூட்டணியை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் பெரமுனவும் பலமான கூட்டணியமைக்க தொடர்ந்தும் 'பேசி' வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment