பதவி நீங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு பெரமுன தரப்பில் முக்கிய நபர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அதனூடாக பிரதமர் பதவியைப் பெறுவதற்கும் அதன் பின்னணியில் பெரமுனவின் அதிகாரத்தை மீள நிறுவவதற்கும் பெரமுனவினர் பல வழிகளில் முயன்று வருகின்றனர்.
எஞ்சியிருக்கும் நாடாளுமன்ற ஆயுள் காலத்துக்குள் மீளவும் கட்சியை நிலை நிறுத்துவதற்கான திட்டத்தின் பின்னணியில் ரணிலை ஜனாதிபதியாக்கிய பெரமுனவினர் தற்போது நாடாளுமன்ற கலைப்பு ஆபத்தை எதிர் நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment