முக்கிய நான்கு நகரங்களுக்கு மேலும் அபிவிருத்தி - sonakar.com

Post Top Ad

Monday, 12 December 2022

முக்கிய நான்கு நகரங்களுக்கு மேலும் அபிவிருத்தி

 நாட்டின் முக்கிய நான்கு நகரங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


கொழும்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணமே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்புள்ள, கண்டி மற்றும் காலிக்கான அபிவிருத்தி திட்டங்கள் ஏலவே செயற்படுத்தப்படுவதாகவும் பிரசன்ன மேலும் தெரிவித்துள்ளார்.


நாட்டின் முக்கிய வர்த்தக தலை நகரான கொழும்பின் அபிவிருத்திக்கு அடுத்த எட்டு வருடங்களுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment