கடவுச்சீட்டினை பெறுவதற்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது குடியகல்வு குடிவரவு திணைக்களம்.
இப்பின்னணியில், ஜனவரி முதல் இணையவழியூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும், கைரேகை பதிவுக்காக மாத்திரம் மாவட்ட ரீதியில் உருவாக்கப்படவுள்ள அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தலா 50 நிலையங்கள் மாவட்ட ரீதியாக உருவாக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக மக்கள் எதிர் நோக்கும் பிரயாண மற்றும் காத்திருப்பு சிரமங்கள் குறையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment