கடந்த எட்டு மாதங்களுக்குள் 477 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
ஏலவே மருத்துவ நிபுணர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலையின் பின்னணியில் பல துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் இவ்வாறு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சங்கம், வருமான வரி மாற்றங்களும் இதற்கான காரணங்களுள் ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment