தற்போதுள்ள பிரச்சினைகளிலிருந்து மக்களை முழுமையாகக் காப்பாற்றி விட்டுத்தான் தேர்தலை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் பாலித ரங்கே பண்டார.
நாவலபிட்டியில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் 50 வீதத்தால் குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு ஏலவே மேலதிக அமைச்சுப் பதவிகளை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஜனாதிபதி, உள்ளூராட்சி சபைகளில் பலத்தைக் கைவசம் வைத்துள்ள பெரமுனவினரின் ஆதரவிலேயே தொடர்ந்தும் தமது பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:
Post a Comment