அமெரிக்க பிரஜாவுரிமையை கை விடுவாரா பசில்? - sonakar.com

Post Top Ad

Thursday 10 November 2022

அமெரிக்க பிரஜாவுரிமையை கை விடுவாரா பசில்?

 


 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு, வேறு எங்கும் செல்ல முடியாமல் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், அடுத்த தேர்தலுக்காக பசில் அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறப்பாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.


 தேர்தல் வந்தால் பெரமுன அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கும் அக்கட்சியின் செயலாளர் சாகர, தேவைப்பட்டால் பசில் ராஜபக்ச தனது வெளிநாட்டு பிரஜாவுரிமையைத் துறந்து போட்டியிட்டு, கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று சூளுரைத்துள்ளார்.


எனினும், ராஜபக்சக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லையென ஜே.வி.பி மற்றும் சமகி ஜன பல வேகய திடமாக கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment