காவியுடையணித்த 'சில' பட்டோக்களால் சர்ச்சைகள் உருவாவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டி நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரசன்ன ரணதுங்க, காவியுடையணிந்து பகலில் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு, இரவு வேளைகளில் கேளிக்கைகளில் ஈடுபட்டவர்களை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைப்பதாகவும் அவ்வாறனவர்களையே குறிப்பிட்டதாகவும், சஜித் வேறு அர்த்தம் கற்பிக்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
மன்னர்களோடு இணைந்து பணியாற்றினாலும் மன்னன் சொல்வதையெல்லாம் எல்ல பிக்குகளும் ஏற்றுக் கொண்டதில்லையென்பதால் ரணிலின் பேச்சு அனைத்து பிக்குகளையும் அவமதித்துள்ளதாக சஜித் விளக்கமளிக்கின்றமையும், பௌத்த துறவிகளும் 'கட்சிகள்' சார்ந்து இயங்கும் சூழ்நிலையே நாட்டில் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment