தேசபந்துவை கைது செய்யக் கோரி மனு! - sonakar.com

Post Top Ad

Tuesday 29 November 2022

தேசபந்துவை கைது செய்யக் கோரி மனு!
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்த சம்பவத்தின் பின்னணியில் சிரேஷ்ட டி.ஐ.ஜி  தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த சம்பவங்களின் பின்னணியில் தேசபந்து தாக்கப்பட்டிருந்ததோடு அவரைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


எனினும், தேசபந்துவைக் கைது செய்வதற்கான போதிய சாட்சியங்களும் காரணங்களும் இருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லையென சுட்டிக்காட்டி இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment