அலி சப்ரிக்கு சீன தூதர் புகழாரம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 November 2022

அலி சப்ரிக்கு சீன தூதர் புகழாரம்
சீனாவின் கடன் வலை குறித்த தவறான பிரச்சாரத்தை மிகச் சிறப்பாக விபரித்த இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியை வெகுவாக புகழ்ந்துள்ளார் சீன தூதர்.


அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை சீனா தனது கடன் வலைக்குள் சிக்க வைத்திருப்பதாக உலகளாவிய ரீதியில் நிலவும் அபிப்பிராயம் தவறென சீனா தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது.


இந்நிலையிலேயே, இலங்கையின் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அலி சப்ரி, இலங்கையே சீனாவிடம் கடன் கேட்டு சென்றதாகவும் சீனா வாரி வழங்கியதெனவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment