ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றைக் கலைக்கக் கூடும் என்ற அச்சம் பொதுஜன பெரமுனவினர் மத்தியில் நிலவுகின்ற நிலையில், தான் அவ்வாறு செய்யப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி.
நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார பிரச்சினை மிகவும் ஆழமானது எனவும் அதற்கான தீர்வைக் காண்பதே தேவையெனவும் ஜனாதிபதி மேலும் விளக்கமளித்துள்ளார்.
எஞ்சியிருக்கும் பதவிக் காலத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரமுனவினரும், அக்கட்சியின் ஆதரவில் ஜனாதிபதி பதவியைப் பெற்ற ரணிலும் கடுமையாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment