தினசரி 50 கிலோ தங்கக் கடத்தல்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Saturday 26 November 2022

தினசரி 50 கிலோ தங்கக் கடத்தல்: அமைச்சர்

 



விமானப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் பயன்படுத்தி, தினசரி 50 கிலோ கிராம் தங்கம் நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும் இதனால் 30 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி மாதாந்தம் இழக்கப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய.


இப்பின்னணியில், 22 கரட்டுக்கு அதிகமான பெறுமதி கொண்ட ஆபரண்களை அணிந்து வருபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் புதிய நுணுக்கங்கள் ஊடாக கடத்தல்களை முறியடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடத்தல்காரர்களே பெருமளவில் சலுகைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கும் அமைச்சர், இதற்கேற்ப நடைடுறை மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment