தேர்தல் வந்தால் பெரமுன நிச்சயம் வெல்லும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday 17 October 2022

தேர்தல் வந்தால் பெரமுன நிச்சயம் வெல்லும்: மஹிந்த

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் என தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ச, இன்றே தேர்தல் நடந்தாலும் பெரமுன அமோக வெற்றி பெறும் என 'நேற்று' தெரிவித்துள்ளார்.


தமது அரசியல் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் முயற்சிக்கும் ராஜபக்ச குடும்பம் பல கூட்டத் தொடர்களை திட்டமிட்டுள்ளது. இப்பின்னணியில் நாவலபிட்டியில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதேவேளை, எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் நாட்டை சீரழித்த கள்வன் என மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோசமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment