மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்: கோட்டா - sonakar.com

Post Top Ad

Monday, 24 October 2022

மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்: கோட்டா

 ஜனாதிபதி பதவியைத் துறந்த பின்னர் எவ்வித மன அழுத்தமும் இல்லாது நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.


நீரிழிவு, இரத்த அழுத்த பிரச்சினைகள் மற்றும் நோய் நொடியின்றி தாம் நிம்மதியாக இருப்பதாக அவரை நலம் விசாரிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கோட்டாபய கூறியதாக தெரிவிக்கும் விமல் வீரவன்ச, இருப்பினும் கோட்டாவின் மோசமான முடிவுகளால் தற்போர் மக்கள் அவதியுற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே இராஜினாமாவை அறிவித்த கோட்டாபய, தனது பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்த பின்னர் நாடு திரும்பியமையும் ராஜபக்சக்களின் மோசமான நகர்வுகளின் பலனால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment