நாவலபிட்டி சென்ற மஹிந்த - கோட்டாவுக்கு எதிர்ப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 16 October 2022

நாவலபிட்டி சென்ற மஹிந்த - கோட்டாவுக்கு எதிர்ப்பு

 மஹிந்தானந்தவின் அழைப்பின் பேரில் அவரது தொகுதிக்கான கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற  மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


பெரமுன ஆதரவாளர்களும் கூடியிருந்த நிலையில், நாட்டை சீரழித்த கள்வர்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியிருந்தனர். இப்பின்னணியில், இரு தரப்பு மோதலைத் தவிர்க்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பிலிருந்து பத்துக்கு மேற்பட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்று, அரசியலை முன்னெடுப்பதற்கு மஹிந்த முயற்சி செய்வதோடு அவரைக் கொண்டு எழுச்சி பெறுவதற்கு பெரமுன அரசியல்வாதிகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment