குறைந்த வருமானம் உள்ள நாடாகிறது இலங்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 11 October 2022

குறைந்த வருமானம் உள்ள நாடாகிறது இலங்கை

 



எதிர்கால கடன் பெறும் வசதிகளைக் கருத்திற் கொண்டு இலங்கையை நடுத்தர வருமானமுள்ள நாடென்ற நிலையிலிருந்து தரமிறக்கி, குறைந்த வருவாய் உள்ள நாடாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.


இந்நடவடிக்கையூடாக உலக வங்கியினால் குறைந்த வருமானம் மற்றும் வறுமையால் வாடும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளையும் பெற முடியும் என அரசியல் மட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச கடன் வசதிகளைப் பெறுவதற்கு திண்டாடி வரும் நிலையில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானமும் இணைந்துள்ளமையும் முன்னைய அரசின் ஊழலே நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment