SJB அலுவலக பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி - sonakar.com

Post Top Ad

Thursday 1 September 2022

SJB அலுவலக பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி

 



சமகி ஜனபல வேகயவின் கேகாலை அலுவலகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படும் 36 வயது பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்று அறிவதற்கான விசாரணை நடாத்தப்படுவதாக கேகாலை பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


நேற்று மாலையிலும் பலபிட்டியவில் 28 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்த அதேவேளை கடந்த இரு வாரங்களாக இவ்வாறான தொடர் கொலைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment