சீனாவுக்கு கொடுத்த பணமும் இல்லை பசளையும் இல்லை: அமரவீர - sonakar.com

Post Top Ad

Thursday 1 September 2022

சீனாவுக்கு கொடுத்த பணமும் இல்லை பசளையும் இல்லை: அமரவீர

 



சீன பசளை விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ராஜபக்ச நிர்வாக 6.9 மில்லியன் டொலர் பணத்தை செலுத்திய போதிலும் அதற்கான தீர்வொன்றும் கிடைக்கவில்லையென நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.


ஆகக்குறைந்தது இரசாயன உரத்தையாவது பெற்றுக்கொள்ள முயன்றதாகவும் எனினும், சீன நிறுவனத்திடமிருந்து எதுவும் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட இயற்கை பசளையை பாவனைக்குப் பெற முடியாத நிலையில் இலங்கை அரசு ஏற்க மறுத்திருந்தது. இப்பின்னணியில், இரு நாட்டுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச அபகீர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment