சவுதியிலும் கசினோ வரப் போகிறது: டயானா - sonakar.com

Post Top Ad

Wednesday 28 September 2022

சவுதியிலும் கசினோ வரப் போகிறது: டயானாமிக இறுக்கமான சட்ட - திட்டங்களைக் கொண்டுள்ள சவுதி அரேபியாவிலும் கசினோக்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் டயானா கமகே.


இரவுப் பொருளாதாரம் இன்றி எந்தவொரு நாடும் முன்னேற முடியாது என தெரிவிக்கும் அவர்,  இரவு 10 மணியானதும் கதவை மூடி உறங்குவதற்கு ஒரு போதும் சுற்றுலாப்பயணிகள் வரப் போவதில்லையெனவும் பங்கொக் போன்ற இடங்கள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருப்பதே அவர்களின் பொருளாதார வெற்றியெனவும் தெரிவிக்கிறார்.


எனவே, இலங்கையில் இரவுப் பொருளாதாரம் அவசியம் எனவும் சவுதி போன்ற நாடுகளும் தற்போது அதன் பால் செல்வதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment