போதைப் பொருள் - விபச்சாரம் பெருகி விட்டது: மைத்ரிபால - sonakar.com

Post Top Ad

Thursday 29 September 2022

போதைப் பொருள் - விபச்சாரம் பெருகி விட்டது: மைத்ரிபால

 நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஒரு புறத்தில் விபச்சாரத்தை பாரிய அளவில் பெருக வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


நல்ல நிலையில் இருந்ததாகக் கருதப்பட்ட பல முக்கிய குடும்பங்களிலிருந்தும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதாகிய சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் ஊடாகத் தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இன்னொரு புறத்தில் போதைப் பொருள் வர்த்தகம் கட்டின்றி வளர்ந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால் 'வசதி வாய்ப்பை' பெருக்கிக் கொண்டவர்கள் மாத்திரமே உயிர் வாழ முடியும் என்ற  நிலை உருவாகும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment