ஈஸ்டர்: மைத்ரிபால சந்தேக நபராக இணைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 16 September 2022

ஈஸ்டர்: மைத்ரிபால சந்தேக நபராக இணைப்பு

 ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மைத்ரிபாலவை சந்தேக நபராக இணைத்துள்ளது நீதிமன்றம்.


கவனயீனத்தினால் மரணங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்ததன் பின்னணியில் மைத்ரிபாலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இன்றைய தினம் விசாரிக்கப்பட்ட வழக்கின் பின்னணியில் எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்ரிபாலவுக்கு ஆணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment