போராட்டம் நடாத்த 'புதிய' இடம் : சாகலபோராட்டங்களை நடாத்த புறக் கோட்டை மிதக்கும் சந்தையருகில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறு மக்கள் போராட்டங்களுக்கென பொது இடம் ஒதுக்கப்படுகின்ற வழமையின் பின்னணியில் இலங்கையிலும் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
பாரிய ஒன்று கூடல்கள், ஓவியக் கண்காட்சிகள் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான அம்சங்களையும் அரங்கேற்றக் கூடிய பொதுவான இடமாக இது அமையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment