செப்டம்பர் 19; தேசிய துக்க தினம் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 9 September 2022

செப்டம்பர் 19; தேசிய துக்க தினம் அறிவிப்பு

 பொதுநலவாய நாடுகளின் தலைமையாகவும் பிரித்தானியாவின் இராணியாக 70 வருடங்கள் ஆட்சி புரிந்து நேற்று மரணித்த இரண்டாம் எலிசபத் நினைவாக செப்டம்பர் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 10 தினங்களுக்கு அனைத்து பொது சேவைகள் கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தனது 96வது வயதில் நேற்று மாலை காலமான இரண்டாம் எலிசபத்தினையடுத்து, அவரது புதல்வர் சார்ல்ஸ் நீண்ட காலத்திற்கு பிறகு மன்னராகியுள்ளமையும் 3ம் சார்ள்ஸ் மன்னர் என்ன அறியப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment