பதவிகளுக்காக ஆதரவில்லையென்கிறார் சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday 17 August 2022

பதவிகளுக்காக ஆதரவில்லையென்கிறார் சஜித்

 



சர்வகட்சி அரசுக்கு தமது கட்சியினர் ஆதரவளிப்பது பதவிகளுக்காக இல்லையென்கிறார் சஜித் பிரேமதாச.


சர்வகட்சி நிர்வாகம் ஊடாக புதிதாக எதுவும் நடக்கப் போவதில்லை, மாறாக பழைய முறைமையை மீண்டும் புகுத்தும் நடவடிக்கை மாத்திரமே இடம்பெறப் போகிறது எனவும் தெரிவிக்கின்ற அவர், மக்கள் அதற்காக போராடவில்லையெனவும் சஜித் தெரிவிக்கிறார்.


அமைச்சுப் பதவிகளை அதிகரித்து அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதை விட அதற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவும் சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment