தலைமைத்துவ சபையுடன் புதிய 'கூட்டணி' : விமல் - sonakar.com

Post Top Ad

Thursday 11 August 2022

தலைமைத்துவ சபையுடன் புதிய 'கூட்டணி' : விமல்
ஆளுங்கட்சியிலிருந்து தனித்தியங்கும் விமல் ஆதரவுக் குழுக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், விமல் வீரவன்சவே முற்படுத்தப்படுகின்ற போதிலும், இப்புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபையே தீர்மானங்களை எடுக்கும் எனவும், தவிசாளர் - உப தவிசாளர் பதவிகளை அனைத்து கட்சிகளும் பகிர்ந்து கொள்ளும் எனவும் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் விமல் தரப்பு முடிவெடுத்துள்ளது.


இப்பின்னணியில் எதிர்வரும் 21ம் திகதியளவில் தமது கூட்டணிக்கு உத்தியோகபூர்வ பெயரிட்டு அறிவிக்கப் போவதாக விமல் விளக்கமளித்துள்ளார்.No comments:

Post a Comment