மூன்றாவது நாடு கிடைக்கும் வரை தாய்லாந்தில்! - sonakar.com

Post Top Ad

Thursday 11 August 2022

மூன்றாவது நாடு கிடைக்கும் வரை தாய்லாந்தில்!

 சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா நிறைவுற்ற நிலையில் அங்கிருந்து கிளம்பி தாய்லாந்து செல்லவுள்ள கோட்டாபய ராஜபக்ச, மூன்றாவது நாடொன்றை தேடி வருகிறார்.


பெரும்பாலும் ஆபிரிக்க நாடொன்றை சென்றடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், நிரந்தரமாக அரசியல் தஞ்சம் கோரக்கூடிய நாடொன்றை சென்றடையும் வரை தற்காலிகமாக அவர் தாய்லாந்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.


அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டிருந்த கோட்டாபய, இலங்கைக் கடவுச்சீட்டிலேயே பிரயாணம் செய்வதால், முன் கூட்டி விசா பெறும் தேவையில்லாத நாடுகளுக்கே நகர்ந்து செல்கின்றமையும் இலங்கையில் தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே வெளிநாடொன்றில் தஞ்சம் கோர முயற்சிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment