அமைச்சர் மகளின் 'மோதிரம்' திருடிய நபர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 15 August 2022

அமைச்சர் மகளின் 'மோதிரம்' திருடிய நபர் கைது

 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கல் பதிக்கப்பட்ட, அமைச்சர் ஒருவரின் மகளின் மோதிரம் திருடியதாக சந்தேகிக்கப்படும் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


யால தேசிய பூங்கா அருகே ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், தனது மோதிரத்தை தவற விட்டுள்ளதாக குறித்த பெண் முறையிட்டுள்ளார். இந்நிலையில், அருகில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மோதிரத்தை எடுப்பதை சிசிடிவி ஊடாக கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கிரிந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment