நாடாளுமன்றை 'எரியூட்ட' திட்டமிடப்பட்டிருந்தது: பந்துல - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 August 2022

நாடாளுமன்றை 'எரியூட்ட' திட்டமிடப்பட்டிருந்தது: பந்துல

 மே 9 வன்முறையையடுத்து உருவான சூழலில் நாடாளுமன்றை எரியூட்டுவதற்கும் கலகக்கார குழுவொன்று திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் பந்துல குணவர்தன.


நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதேவேளை, அதனை அரசியல் சந்தர்ப்பவாதிகள் உபயோகப்படுத்திக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டதாகவும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களுக்கு 'வேறு' வகையான பின்னணியிருந்ததாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையிலேயே ஜனாதிபதியினால் தமக்கு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டதாக பந்துல விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment