நாட்டை விட்டு தப்பியோடியிருந்த கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பையும் தகுந்த ஏற்பாட்டையும் செய்து கொடுக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணைக்குழு.
கோட்டாபயவும் அவரது குடும்பத்தாரும் நாடு திரும்புவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறதென சுட்டிக்காட்டியுள்ள குறித்த அமைப்பு, அதற்கான தகுந்த வழிமுறைகைளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையென சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்த கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக் கடவுச்சீட்டில் முன் கூட்டிய விசா பெறும் அவசியமில்லாத நாடுகளுக்கு மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலையில் தற்சமயம் தாய்லாந்தில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment