சர்வகட்சி அரசில் ஜோன்ஸ்டன் பெர்னான்டாவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது பெரமுன.
அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் , அதேவேளை எண்ணிக்கையும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பின்னணியில் தமது தரப்பிலிருந்து நாமல், கஞ்சன உட்பட 12 பேரது பெயர்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாமல், ஜோன்ஸ்டன், சனத், பவித்ரா, ஜனக உட்பட்ட பெரும்பாலானோர் மக்கள் புரட்சியால் வீழ்த்தப்பட்ட அரசிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment